2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

இந்தியா-இலங்கை புலனாய்வு தகவல்களை பரிமாற்றுகின்றன:அமைச்சர் கெஹெலிய

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 24 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தகவல்களை பகிர்ந்துகொள்ளும் ஏற்பாட்டுடன் இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதனால் இலங்கையிடம் உயர்தரத்திலான புலனாய்வு சேவையைக் கொண்டுள்ளது என அரசாங்கம் கூறியுள்ளது.

இந்தப் பிராந்தியத்தில் காணப்படும் பயங்கரவாத செயல் யாவுமே இந்த சேவையினால் கண்டுபிடிக்கப்படும். இந்தியாவுக்குள் இலங்கை ஊடாக நுழைவதற்கு திட்டமிட்டவாறு 200 லக்ஷ்ர் இ தொய்பா உறுப்பினர்கள் இருப்பதான அமெரிக்காவினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட அறிக்கை பற்றிய கேள்விக்கு பதில் கூறுமுகமாக அரசாங்க பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியாவுடன் நாம் தெளிவான புரிந்துணர்வைக் கொண்டுள்ளோம். இணைந்த கண்காணிப்பு நடவடிக்கைகள், தகவல் பறிமாற்றங்களை மேற்கொள்கிறோம். இப்பிராந்தியத்தில் என்ன நடைபெறுகிறது என்பதை வெறொருவரையும் விட இந்தியா நன்கறியும். எனவே எந்த நடவடிக்கையும் கண்டுபிடிக்கப்பட்டு விபரங்கள் இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என அமைச்சர் ரம்புக்வெல கூறினார்.

லக்ஷ்ர் இ தொய்பாவிற்கு பயிற்சி அளிப்பதற்கு இலங்கை ஒரு தளமாக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுவது முற்றுமுழுதான கட்டுக்கதை என்றும் சில உள்நோக்கங்களுடன் இவ்வாறான கதை பகிரப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--