Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 27 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தமது சொந்த இடத்திற்கு திரும்பியுள்ள பொதுமக்களை வாக்காளர்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்வது தொடர்பில் தமது வேலைகளை தேர்தல் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பில் டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்த பிரதி தேர்தல்கள் ஆணையாளர் நிஷாந்த திரிபிரிய, ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கிராம அலுவலர் மூலம் இதற்கான தகவல்கள் திரட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இரண்டாவதான 'பி' பட்டியலில் தகுதியுள்ளவரின் பெயர்கள் சேர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் நவம்பர் முதல் ஜனவரி வரையிலான 3 மாதகாலப் பகுதிக்குள் அல்லது எதிர்வரும் 4 வாரகாலத்திற்குள் இரண்டாவது பட்டியலில் வாக்காளர்களின் பெயர்கள் தெரிவு செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்படும் எனவும் நிஷாந்த திரிபிரிய தெரிவித்தார்.
இதனையடுத்து 2009ஆம் ஆண்டுக்கான வாக்காளர்கள் பட்டியலில் இவர்களின் பெயர்கள் சேர்த்துக் கொள்ளப்படும் எனவும் மேலும் அவர் கூறினார்.(DS)(DM)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .