2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

உள்ளூராட்சி திருத்தச் சட்ட மூலத்தின் சாதக பாதகங்கள் குறித்து கலந்துரையாடல்

Super User   / 2010 செப்டெம்பர் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt                                                   

                                                            (றிப்தி அலி)

அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் அரசாங்கம் முன்வைக்கவுள்ள உத்தேச உள்ளூராட்சி திருத்தச் சட்ட மூலத்தின் மூலம் சிறுபான்மையினருக்கு ஏற்படவுள்ள சாதக பாதகங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று முஸ்லிம் கவுன்சில் ஒவ் ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் இன்று மாலை கொழும்பில் இடம்பெற்றது.

முஸ்லிம் கவுன்சில் ஒவ் ஸ்ரீலங்காவின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பல புத்திஜீவிகளும் கல்விமான்களும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

இங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை உள்ளடக்கிய முன்மொழிவொன்றை தயாரித்து, முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா தேர்தல் திருத்தத்திற்கான நாடாளுமன்ற உப குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது.  

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூரும் கலந்து கொண்டார். (Pix by:Pradeep Pathirana)

alt

alt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--