Super User / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.செல்வநாயகம்)
வண.உவத்தன்ன சுமணதேரரும் இன்னும் நான்கு பேரும் வெடி பொருட்கள் மற்றும் ஆயுதங்களை வைத்திருந்தார்கள் என தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அதே சமயம் தன்னை தடுத்து வைத்திருப்பதற்கு எதிராக அவர் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை மேல் நீதிமன்றத்தில் இவர் தொடர்பான வழக்கு முடிவடைந்த பின்னரே, அடிப்படை உரிமை மீறல் தொடர்பான மனுவை தொடர முடியும் என அறிவித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தினால் எடுக்கும் தீர்மானம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வழக்கின் தீர்ப்புக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என நீதிபதிகளான சிரானி ஏ.பண்டாரநாயக்க, ஆர்.கே.சுரேஷ் சந்திர ஆகியோர் தெரிவித்தனர்.
வண. உவத்தன்ன சுமண தேரர் வெள்ளவத்தை ஸ்ரீ போதிராஜராமய விகாரையில் உள்ள, அவரது அலுவலகத்தில் வைத்து கடந்த ஜனவரி 23ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago