Super User / 2010 ஒக்டோபர் 01 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலிருந்து வீட்டுப் பணியாளர்களை வேலைக்குச் சேர்க்கும் சவூதி அரேபிய அனுசரணையாளர்கள் விண்ணப்ப நடைமுறைகளை பூர்த்தி செய்து கட்டணங்களை செலுத்திய பின்னரும் 9-12 மாத காலம் தாமதத்தை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
'கடந்த மார்ச் மாதம் நான் கட்டணத்தைச் செலுத்தினேன். புதிய நடைமுறையின்படி நான் 190 நாட்கள் காத்திருக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. ஆனால் இன்னும் நான் காத்திருக்க நேரிட்டுள்ளது' என ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியரான கே. சாட் என்பவர் கூறியுள்ளதாக அராப் நியூஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பல தடவை ஆட்சேர்ப்பு நிலையத்திற்கு சென்று விசாரித்த போதிலும் இலங்கையிலுள்ள பிரச்சினையொன்றின் காரணமாகவே தாமதம் ஏற்படுவதாக தனக்கு கூறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த மற்றொரு நபர் தான் 10 மாதகாலமாக காத்திருப்பதுர்குகு; கூறியுள்ளார்.
சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரிலுள்ள பதீல் ஆட்சேர்ப்பு முகவர் நிலையத்தின் முகாமயாளர் இது இத Nதுர்டுர்பாக கூறுகையில் சம்பள விவகாரம் தொடர்பாக இலங்கை சவூதி அரேபிய அரசாங்கங்களுக்கிடையில் நடைபெறும் பேச்சுவார்த்தை காரணமாகவே இத்தாமதம் ஏற்படுவதாக கூறியுள்ளார்.
'வீட்டுப் பணியாளர்களுக்கான தற்போதைய 650 றியால் சம்பளத்தை 800 றியாலாக அதிகரிக்க வேண்டும் என இலங்கை கோருவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது' என அந்நிலையத்தின் முகாமையாளர் சமீர் கூறியுள்ளார்.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago