Super User / 2010 ஒக்டோபர் 18 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நோர்வேயின் சுற்றாடல் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் அடுத்த வருட முற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அங்கத்தவர்களை சொல்ஹெய்ம் சந்திப்பார் என ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தனது முந்தைய இலங்கை விஜயங்களின்போது தமிழீழ விடுதலைப் புலிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்துவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு முதல் தடவையாக விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான முயற்சிகளுக்கான நோர்வேயின் விசேட தூதுவராக செயற்பட்ட எரிக் சொல்ஹெய்மிற்கும் நோர்வே அரசாங்கத்திற்கும் எதிராக இலங்கையில் கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டிருந்தன.
எனினும் கடந்த மாதம் ஐ.நா. கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக நியூயோர்க்கிற்குச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எரிக் சொல்ஹெய்மை சந்தித்துப் பேசியிருந்தார். இந்நிலையில், சொல்ஹெய்ம் அடுத்த வருட முற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
34 minute ago
46 minute ago
1 hours ago
Thilak Tuesday, 19 October 2010 12:21 AM
இந்தத் தடவை கறுப்புக்கொடிகள் மறைந்து, அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்படவும்கூடும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
46 minute ago
1 hours ago