Editorial / 2026 ஜனவரி 23 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்த ஒரு சம்பவமானது பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ஒரு சாதாரண சேவையாக தொடங்கிய விஷயம், யாருமே எதிர்பார்க்காத வகையில் பொலிஸ் விவகாரமாக மாறியிருப்பது பலரையும் கவலைப்படுத்தியிருக்கிறது... அப்படி என்ன நடந்தது மும்பை வடாளா பகுதியில் நடந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது…
மும்பையில் வசித்து வருகிறார் அந்த 46 வயது பெண். இவர் நீண்ட நாட்களாக தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இந்த வலி குறையணும் என்பதற்காக, வீட்டுக்கே வந்து மசாஜ் செய்யும் ஒரு சேவையை ஆன்லைனில் தேடி உள்ளார்..
அதன்படியே, அவர் முன்பதிவு செய்திருக்கிறார். இறுதியில் ஆப்பில் ஒரு மசாஜ் சேவையை புக் பண்ணியிருக்கிறார்.
ஆனால் வழக்கமாக வர வேண்டிய மசாஜ் தேரபிஸ்ட் அன்று வரவில்லை. அதற்கு பதிலா வேறு ஓரு பெண் ஊழியர் வந்ததாக சொல்லப்படுகிறது.
புக் செய்யும்போது இருந்த பெண் ஊழியருக்கு பதிலாக, திடீரென மற்றொரு பெண் ஊழியர் வந்திருப்பதை பார்த்ததுமே, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்துள்ளது. காரணம், அந்த தெரபிஸ்ட் கொண்டு வந்த மசாஜ் உபகரணங்கள், பாதுகாப்பாக இல்லாத மாதிரியும், சரியான வசதியில் இல்லாதபடியும் இருந்துள்ளது.
தோள்பட்டை வலி அதிகம் என்பதால், வேறு வழியின்றி ஒப்புக் கொண்டுள்ளார். மசாஜ் செய்வதாக இருந்தால் படுக்கையறையில் வேண்டாம், ஹாலிலேயே மசாஜ் பண்ணிக்கலாம் என்று அந்த பெண் சொல்லி உள்ளார். இதுவும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு இன்னும் அசௌகரியத்தை தந்துள்ளது..
ஒருகட்டத்தில் மசாஜ் தெரபிஸ்டான அந்த பெண், பெண்ணை இழுத்து போட்டு கடுமையாக தாக்கிவிட்டாராம். தலைமுடியை பிடிச்சு இழுத்து, முகத்திலும் சரமாரியாக அடித்துள்ளாராம்.. இதை பார்த்து பதறிப்போய் தடுக்க வந்த அந்த பெண்ணின் 18 வயது மகனையும் அந்த பெண் தாக்கிவிட்டாராம்.
பிறகு உடம்பெல்லாம் ரத்த காயங்களுடன் பொலிஸூக்கு ஓடினார் அந்த பெண்.வடாளா பொலிஸ் ஸ்டேஷனில் இதுகுறித்து புகாரும் தந்தார்.. இந்த புகார் இப்போதைக்கு செய்யப்பட்டுள்ளது. ஆனால் உடனடியாக கைது செய்யக்கூடிய வழக்கு இல்லை என்பதால், இதுகுறித்து நிச்சயம் விசாரணை நடத்தப்படும் என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்ல, வீட்டிற்குள் நடந்த இந்த ரத்தக்களறி சம்பவம் வெளியே தெரிந்து பரபரப்பாகிவிட்டது.. இதனால் சேவை நிறுவனமானது, சம்பவத்தில் தொடர்புடைய அந்த மசாஜ் தெரபிஸ்டை தங்களுடைய சேவையிலிருந்து நீக்கியதாகவும், பொலிஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது..
இந்த 2 பெண்கள் தலைமுடியை பிடித்து போட்டுக் கொண்ட சண்டைதான் வீடியோவாகவும் டிரெண்டாகி வருகிறது..
சாதாரண தோள் பட்டைக்கு மருந்து போட்டு கொண்டிருந்த பெண், இப்போது உடம்பெல்லாம் காயங்களுக்கு சிகிச்சையை மேற்கொண்டு வருகிறாராம்.
13 minute ago
20 minute ago
26 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
26 minute ago
58 minute ago