Editorial / 2026 மார்ச் 20 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் விடுத்த இராணுவ ரீதியான கோரிக்கைகளை நிராகரிப்பதன் மூலம், இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையில் நடுநிலைமையைப் பேணி வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது குறித்து ஜனாதிபதி மேலும் விளக்குகையில்:
"ஈரானுக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருவதற்கு அனுமதி கோரியிருந்தன. அதேவேளை, அமெரிக்கா தனது இரண்டு போர் விமானங்களை (Fighter Jets) மத்தள விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு அனுமதி கோரியிருந்தது.அமெரிக்க விடுத்த கோரிக்கையை இலங்கை நிராகரித்தது
சர்வதேச விவகாரங்களில் எவ்வித பக்கச்சார்புமின்றி நடுநிலைமையைப் பேணுவதற்காக, அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளினதும் இந்தக் கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இதன் மூலம் நாம் எமது நடுநிலைத் தன்மையைப் பாதுகாத்துள்ளோம்," என அவர் குறிப்பிட்டார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago