2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சிங்கி இறால்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 22 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கற்பிட்டி ஏரியில் மீனவர்களால் பிடிக்கப்பட்ட 13 சிங்கி இறால்களை கற்பிட்டி விசேட பொலிஸ் பிரிவினர் இன்று வெள்ளிக்கிழமை கண்டுபிடித்துள்ளனர்.

கற்பிட்டி ஏரியில் இரு பெட்டிகளில் அடைக்கப்பட்ட நிலையில் இந்த சிங்கி இறால்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன.

சிங்கி இறால்கள் இனப்பெருக்கச் செய்யும் இந்தக் காலப்பகுதியில் சிங்கி இறால்களை பிடித்தல், அதனை வைத்திருத்தல், ஏற்றுமதி செய்தல், விற்பனை செய்தல் ஆகியன சட்டவிரோதமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

இவ்வாறு மீனவர்களால் பிடிக்கப்பட்ட சிங்கி இறால்களை கடலில் விடுமாறு புத்தளம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவை மீண்டும் கடலில் விடப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .