2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

பல்கலைக்கழக பிக்குமாணவனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

Super User   / 2010 ஒக்டோபர் 26 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக அதிகாரியொருவரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தின் பிக்கு மாணவன் ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றல் ஆஜராகுமாறு அம்மாணவனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக நுகேகொடை பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

பிக்குமாணவர்களின் விடுதியிலிருந்து வந்த இரைச்சல் சத்தம் குறித்து விசாரிப்பதற்காக பல்கலைக்கழக உபவேந்தர் விடுதிக்குள் செல்ல முயற்சித்தபோது மேற்படி மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--