2020 நவம்பர் 25, புதன்கிழமை

தாயின் அரவணைப்பை இழந்த வங்கப் புலிக்குட்டி மரணம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஒலிந்தி ஜயசுந்தர)

தெஹிவளை மிருகக்காட்சிச்சாலையில் கடந்த 7 நாட்களுக்கு முன் பிறந்த வங்காளப் புலிக்குட்டியொன்று இன்று உயிரிழந்ததாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தேசிய விலங்கியல் பூங்கா அறிவித்துள்ளது.

இம்மரணத்தற்கான காரணத்தை அறிவதற்கான பிரேதப் பரிசோதனை  நடைபெறுவதாக தேசிய விலங்கியல் பூங்கா பிரிவுப் பணிப்பாளர் பஸ்வர குணரட்ன தெரிவித்தார்.

இப்புலிக்குட்டி அதனது தாயிடமிருந்து தாய்ப்பாலை பெறாமையே இம்மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் என மிருகவைத்திய நிபுணர் டாக்டர் ஜகத் ஜயசேகர தெரிவித்துள்ளார்.  

இப்புலிக்குட்டிக்கு பாலூட்ட அதனது தாய் மறுத்ததையடுத்து அதை காப்பாற்றுவதற்கு அதிகாரிகள் கடும்முயற்சிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Pix by :- Indrarathna Balasooriya


  Comments - 0

 • xlntgson Sunday, 31 October 2010 08:52 PM

  thilak, அனுதாபம் தான். ஆனால் வெள்ளைக்கொடி எதற்கு கருப்பு கொடி வேண்டும் என்றும் சண்டை போட்டுக்கொள்வதற்கா?
  மிருகங்கள் மட்டுமல்ல பெண்கள்கூட தான் பெற்ற பிள்ளைக்கு பால் கொடுக்க மறுத்து விஷமூட்டிகொன்ற சம்பவங்களை நாம் கண்டிருக்கின்றோமல்லவா?
  பூனை இனத்தில் இக்குணம் சர்வ சாதாரணமாக காணப்படும், புலி பூனை இனத்தை சேர்ந்தது, பெரும்பூனை என்றும் அழைக்கப்படும்.
  பூனை புலிக்கு தனது மூதாதையருக்கு மரம் ஏறக்கற்றுக்கொடுத்து மரம் இறங்க கற்றுக்கொடுக்க வில்லை என்பர். புலி மரத்திலிருந்து குதிக்கும் இங்கு பெரிய பூங்கா தேவை.

  Reply : 0       0

  Thilak Friday, 29 October 2010 10:08 PM

  இந்த புலியின் மரணம் தொடர்பாக வெள்ளைக்கொடி விடயம் ஏதும் உள்ளதா? அதாவது அனுதாபம் தெரிவிக்க வெள்ளைக்கொடி கட்டவில்லையா என்று கேட்டேன்..

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .