Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 29 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நபீலா ஹுசைன்)
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேமரத்னவை கைது செய்தமை கண்டிப்பதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தெரிவித்தது.
பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தே உதுல் பிரேமரத்ன கைது செய்யப்பட்டுளதாகவும் தொழிற்சங்க மத்திய நிலையம் குற்றஞ்சாட்டுகின்றது.
மாணவர்களின் உரிமைகளை உறுதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய வர்த்தக ஒன்றியங்களின் நிறுவனத்தின் தலைவர் லால் காந்த தெரிவித்தார்.
தற்போது பல்கலைக்கழகங்கள் அனைத்தும் குழப்பகரமான நிலையில் உள்ளன. இதற்கான பொறுப்பை அரசு வேறொரு தரப்பினரின் தலையில் சுமத்தப்பார்க்கின்றது என் லால் காந்த குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்தாவிடின் தொழிலாளர்களும் இப்பிரச்சினையில் இறங்க வேண்டி ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
"இலவச கல்வியை அரசாங்கம் நிறுத்துவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தும் மாணவர்கள் கைது செய்யப்படுகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும்" எனவும் தொழிற்சங்க மத்திய நிலையம் தெரிவித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
9 hours ago
07 Jul 2025