Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 நவம்பர் 01 , மு.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸில் நிர்மாணிக்கப்படவுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் சிலைக்கு தடை விதிக்குமாறு அந்நாட்டு அரசாங்கத்திடம் பாரிஸிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
இது தொடர்பில் பிரான்ஸின் வடகிழக்கு பிராந்தியத்திலுள்ள லா கோர்னியூவ் நகர மேயருக்கு எழுத்து மூலமான கோரிக்கைக் கடிதமொன்று மேற்படி உயர்ஸ்தானிகராலயத்தினால் கையளிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கைத் தமிழர் அதிகமாக வாழும் லா கோர்னியூவ் நகரில் மேற்படி சிலை நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அதற்கான அடிக்கல் ஏற்கனவே நடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடவடிக்கைக்கு ஜேர்மன் மற்றும் பிரான்ஸில் வாழும் இலங்கையர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அதேவேளை விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு சார்பான இந்த வேலைத்திட்டத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மேற்படி நகர மேயர் மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை விமானப் படையினரால் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளரான சு.ப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago
xlntgson Tuesday, 02 November 2010 08:50 PM
சுப. தமிழ்செல்வனுக்கு சிலை வைக்கும் கோரிக்கையை பிரெஞ்சு அரசு நிராகரித்து விட்டதாக செய்தியும் வந்திருக்கிறது எப்படியாக போனாலும் காக்கை எச்சமிடும் இந்த சிலைகளினால் வரும் பெரும் பிரச்சினைகளை பார்க்கும் போது இந்த சிலை எழுப்புகளினால் செலவுக்குரிய பலன் கிட்டுகிறதா?
இந்தியாவில் அம்பேத்கர் சிலை இருக்கும் இடங்களிலெல்லாம் எதிரிகள் அதை அசுத்தப்படுத்துவதோடு அச்சிலைக்கு மாலை அணிவித்தார் என்று ஒருவரை தாக்கியும் ஜாதி ஒதுக்கம் செய்து பெரும் பிரச்சினைக்கு உள்ளாகின்றனர். இராஜீவ்காந்தியின் சிலைக்கு செருப்புமாலை ...
Reply : 0 0
xlntgson Tuesday, 02 November 2010 09:17 PM
விடுதலை சிறுத்தைகள்தாம் அணிவித்தனர் என்று காங்கிரஸ் கட்சியும், யாரோ அணிவித்து விட்டனர் என்று தொல்மாவளவனும் கூற பிரச்சினை முடிந்தபாடில்லை, அவரை எதிர்வரும் தேர்தலில் கூட்டணியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை!
அவர் மேல்சாதி போக்குடைய ஜெயலலிதாவோடு ஒரு போதும் கூட்டு சேர மாட்டார் என்பதால் அவரை புறக்கணிக்க எளிது என்றாலும் அவருக்கு அவ்வளவு பெரிய செல்வாக்கு இல்லை வைகோவுக்கும் ராமதாசுக்கும் கூட அப்படியே!
கேப்டன் எனப்படும் விஜயகாந்த் கூட்டணி அமைப்பில் பெரும்பங்கு வகிப்பார் என்றும் எதிர்வு கூறல்கள்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago