Super User / 2010 நவம்பர் 03 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச தொழிற்சங்க கூட்டுச் சம்மேளனத்தின் அனைத்து 8 முக்கிய ஒப்பந்தங்களிலும் இலங்கை கையெழுத்திட்ட போதிலும் அவற்றை அமுல்படுத்துவதற்கு இலங்கை தவறியுள்ளதாக உலக வர்த்தக அமைப்பிற்கு சர்வதேச தொழிற்சங்க கூட்டுச்சம்மேளனம் இன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சர்வதேச தொழிற்சங்க கூட்டுச்சம்மேளனம் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையில் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இணைவதை தடுப்பதற்காக தொழிற்சங்க செயற்பாட்டாளர்களை தொழில்தருநர்கள் பணியிலிருந்து விலக்குகின்றனர்.
இப்பிரச்சினைகள் குறிப்பாக ஏற்றுமதி வலயங்களில் கடுமையாக உள்ளது. தொழிற்சங்கங்களுக்குப் பதிலாக ஊழியர் கவுன்ஸில்களை அங்கீகரிக்குமாறு தொழில்தருநர்களை அரசாங்கம் ஊக்குவிக்கிறது.
கூட்டாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும் அரசாங்கம் எந்தவொரு தொழிற்துறையையும் அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்துவதன் மூலம் வேலை நிறுத்தங்களை சட்டவிரோதமாக்க முடியும்.
தனியார் துறையில் பாலின பாகுபாட்டை இலங்கை சட்டங்கள் தடுக்கவில்லை. சில துறைகளில் சமனான வேலையை செய்யும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசமான சம்பளத்தை வழங்குகிறது. சிறுவர் தொழிலாளர்களும் கட்டாயப்படுத்தி வேலை வாங்குதலும் சட்டத்தினால் தடை செய்யப்பட்டபோதிலும் இவ்விரு விடயங்களும் காணப்படுகின்றன.
55 minute ago
8 hours ago
27 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
8 hours ago
27 Oct 2025