Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Super User / 2010 நவம்பர் 09 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சனத் டெஸ்மன்ட்)
அண்மையில் வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படத்தின் திருட்டு இறுவெட்டுக்களை விற்பனை செய்த ஐந்து பேரை போதிராஜ மாவத்த, குணசிங்கபுர ஆகிய இடங்களில் குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று கைது செய்தனர்.
பெருந்தொகையான திருட்டு வீ.சீ.டிகளையும் டீ.வீ.டிகளையும் இவற்றை தயாரிக்க பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
தமிழ் சினிமா ரசிகர்களுக்காக தீபாவளி பண்டிகை காலத்தில் வெளியிட இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம் 3 மில்லியன் (இந்திய) ரூபா செலவில் உத்தமபுத்திரன் என்ற படத்தை இறக்குமதி செய்திருந்தது.
தீபாவளியன்று வெளியிடப்பட்ட இந்த படத்தின் திருட்டு பிரதிகள் மூன்று நாட்களுக்குள்ளேயே சந்தைக்கு வந்துவிட்டது என இலங்கை திரைப்பட கூட்டுத்தாபன பிரதி பொது முகாமையாளர் லங்கா தத்ம விக்கிரம கூறினார்.
இப்படத்தின் முழு உரிமையும் இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்திற்கே உள்ளது. ஆகவே நாம் புலனாய்வு பிரிவினரின் உதவியுடன் திருட்டு வீ.சி.டி விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தோம் என்றார் அவர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago