2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

மூன்றாம் தவணை பரீட்சைக்கு முறையான ஏற்பாடுகள் இல்லை:ஆசிரியர் சங்கம்

Super User   / 2010 நவம்பர் 10 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நபீலா ஹுசைன்)

வடமேல், மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் மூன்றாம்  தவணை பரீட்சை நடத்துவதற்கு முறையான ஏற்பாடுகள் இல்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று தெரிவித்தது.

"கல்வியமைச்சு முன்வைத்த செயன்முறை இந்த மாவட்டங்களில் பின்பற்றப்படாததனாலேயே மாகாணங்களுக்கிடையில் கல்வித் தரத்தில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன.

2008 இல் கல்வியமைச்சு சகல மாணவர்களுக்கும் ஒரே வினாத்தாளை வழங்கும் செயன்முறை ஒன்றை ஏற்படுத்தியது. இதனால் கல்வி மட்டத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கவில்லை. இச்செயன்முறை பின்பற்றப்படாததனாலேயே பல்வேறு விதமான வினாத்தாள்கள் வழங்கப்படுகின்றன" என  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

கல்வியமைச்சின் சுற்றறிக்கையின்படி பரீட்சை வினாத்தாள்களுக்காக பணம் அறவிடப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இது மீறப்படுகிறது.

மேல் மாகாணத்தில் தரம் 10, 11 மாணவர்களுக்கும், தென் மாகாணத்தில் தரம் 6 தொடக்கம் 11 வரை உள்ள மாணவர்களுக்கும் பணம் அறவிடப்படமால் சகலருக்கும் பொதுவான வினாப்பத்திரம் வழங்கப்படுகின்றது. ஏனைய மாவட்டங்களில் இப்படி இல்லை என்றார் ஜோசப் ஸ்ராலின்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .