2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

இலங்கை நீதிபதிகளுக்கு இந்தியா பயிற்சி

Super User   / 2010 நவம்பர் 12 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை நீதிபதிகள் பயிற்சி பெறுவதற்கு இந்தியா உதவவுள்ளது. பெங்களுர் மற்றும் போபால் நகரங்களில் இப்பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதாகவும் இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கையெழுத்திடப்படவுள்ளதாகவும் இலங்கை நீதியமைச்சர் அதாவுட செனவிரட்ன மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தா ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் பின்னர் இலங்கை நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை, இந்தியா ஆகிய இருநாடுகளும் பிரித்தானிய காலனித்துவ காலத்தில் ஏற்படுத்தப்பட்ட உரோம டச்சு சட்டத்தின் அடிப்படையிலான சட்ட முறைமையைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (டெக்கான் ஹெரால்ட்)
 


  Comments - 0

 • Mohamed Saturday, 13 November 2010 07:25 PM

  நீதி துறையில் பாண்டித்தயம் பெற்றவர்களா இந்திய நீதிபதிகள்? அவர்களது நாட்டு நீதிபதிகளுக்கே நீதி சொல்லிக்கொடுக்க வேண்டியுள்ளது,அவர்களிடம் போய் நம்நாட்டு நீதவான்கள் நீதி கற்க போகிறார்களாம்!

  Reply : 0       0

  Mohamed Monday, 15 November 2010 12:11 AM

  நா எழுதிய கமெண்ட் ஐ வெளிடாமல் விட்டதற்கு என்ன காரணம்? என்பதனை எனது ஈ-மெயில் இற்கு தெரியப்படித்தினால் நன்றாக விருக்கும். இல்லையென்றால் உங்களை மதச்சார்புள்ள ஒருதலைபட்சமான ஆர் எஸ் எஸ் போன்ற இயத்கமாகத்தான் நினைக்க வேண்டி இருக்கும். என்பதோடு மட்டுமில்லாமல் உங்களின் வண்டவாளம் தோளுரித்துகாட்டப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

  Reply : 0       0

  Dharshan Monday, 15 November 2010 01:38 AM

  ஆஹா, மொஹமட் நீர் என்ன முன்னாள் பிரதம நீதியரசரா? இந்திய இலங்கை நீதிபதிகள் பற்றி உமக்கு என்ன தெரியும்? இந்தத் திட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் உம்மை கலந்தாலோசிக்காமல் விட்டார்களே. முதலில் தோலுரித்து, தோளுரித்து என்பதற்கு வித்தியாசங்களைக் கற்றுக்கொள்ளும்.

  Reply : 0       0

  xlntgson Tuesday, 16 November 2010 09:21 PM

  இணையத்தில் தமிழ் கொஞ்சம் எழுத்துப் பிழையாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அதை பொருட்படுத்தாவிட்டாலும்
  இந்திய அரசியல் அமைப்பு முறை மிக குறைகள் நிறைந்தது என்று சொல்லி விட முடியாது. அது சுதந்திரம் பெற்ற காலமாக பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்நோக்கி வளர்ந்து வருகிறது.
  எங்கேயும் சட்டச்சிக்கல் இருக்கத்தான் இருக்கிறது. அதற்காக கேவலப்படுத்துவது சரி இல்லை. இந்திய சட்டம், மத தர்ம ஞாயங்களின் அடிப்படையிலானது
  (குதிரைரேஸ் சரி என்று ஒரு நீதிபதியும், ஒருபாற் திருமண அனுமதி என்று ஒரு நீதிபதியும் தீர்த்த
  வழக்குகள் தவிர்த்து)

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .