Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 நவம்பர் 16 , பி.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)
யாழ்ப்பாணத்தில் தன்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கான பழியை அப்பாவி தமிழ் மக்கள் மீது சுமத்தவேண்டாம் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்சுனில் ஹந்துன்நெத்தி நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அரசாங்கத்தை கோரினார்.
தலையில் ஏற்பட்ட காயத்திற்கு கட்டுபோடப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்திற்கு வந்த சுனில் ஹந்துன்நெத்தி, தன் மீதான தாக்குதல் தமிழ் பொதுமக்களின் நடவடிக்கையென கூற முற்படுவதாகத் தெரிவித்தார்.
'இத்தகைய கருத்துக்களைக் கூறி இன வன்முறைகளைத் தூண்ட வேண்டாம் என மேற்படி சக்திகளிடம் நான் கோருகிறேன். தமிழ் மக்கள் என்னை காப்பற்ற வந்தார்கள். அவர்கள் இல்லாவிட்டால் நான் மேற்படி தாக்குதலில் இறந்திருப்பேன். அதன்பின் நீங்கள் என்னை சவப்பெட்டியில் வைத்து நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவந்திருப்பீர்கள்' என சுனில் ஹந்துன்நெத்தி கூறினார்.
ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா தன்னாலான வகையில் உதவியளித்ததாகவும் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
'ஆளுங்கட்சியின் பிரதம கொறடா தினேஸ் குணவர்தன, பல அமைச்சர்கள், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னை தொடர்புகொண்டனர். அவர்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். அதே ஒற்றுமை உணர்வை தமிழ் மக்களிடமும் காட்டுமாறு நான் கோருகிறேன்.
'நான் யாழ்ப்பாணத்தைக் காண ஆவலாக இருந்தேன். யுத்த காலத்தில் நாம் யாழ்ப்பாணத்திலிருந்து பிரிக்கப்பட்டிருந்தோம். த.தே.கூ. யாழ்ப்பாணத்தில் மக்கள் படும் துன்பங்களை பார்க்க வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கோரியமை எனக்கு இன்னும் ஞாபகத்தில் உள்ளது. அங்கு மனிதர்கள் இல்லாத கட்டிடங்கள் உள்ளன' எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கூறினார்.
5 hours ago
8 hours ago
19 Sep 2025
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
19 Sep 2025
19 Sep 2025