2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்து

Menaka Mookandi   / 2010 நவம்பர் 17 , மு.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை உட்பட உலகெங்கிலும் பரந்து வாழும் தங்களது சகோதர முஸ்லிம்களுடன் இணைந்து ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

பல்வேறு தேசங்களைச் சேர்ந்த பல்வேறு மொழிகளை பேசுகின்ற பல்வேறு கலாசாரங்களை உடைய இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து இறைவனின் மகத்துவத்தையும் புகழையும் பறைசாற்றும் ஹஜ் யாத்திரையை மேற்கொள்வது இஸ்லாம் மார்க்கத்தில் உள்ள உயர்ந்த தியாகத்தை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.

அத்துடன், ஐக்கியத்தையும் அடையாளப்படுத்தி நிற்கின்றது. இந்த ஐக்கியம் அவர்களின் வாழ்க்கையில் நீடித்து ஏனைய சமயங்களைச் சேர்ந்த சகோதரர்களுடன் மானிட சகோதர உணர்வுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும். இலங்கை முஸ்லிம்களை பொருத்தவரையில் அவர்கள் எமது நாட்டின் முன்னேற்றத்திற்கு எமது மக்களின் ஐக்கியத்திற்கு குறிப்பிட தக்களவு பங்களிப்புகளை செய்துள்ளனர்.

பல நூற்றாண்டுகளாக அவர்கள் தாய் நாட்டின் முன்னேற்றத்திற்காக பங்களிப்புச் செய்து எமது நாட்டில் வாழுகின்ற ஏனைய சமூகங்களோடு ஐக்கியத்துடனும் நட்புறவுடனும் வாழந்து வந்துள்ளதோடு அதனை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர்.

பயங்கரவாதிகளால் தங்களது சொந்த இருப்பிடங்களை விட்டும் வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான முன்னெடுப்புகள் இடம்பெற்று வரும் சூழ்நிலையில் இவ்வருட ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

இது அவர்கள் ஏற்கனவே வாழ்ந்துவந்த பிரதேசங்களில் சமாதானம், மகிழ்ச்சி நிறைந்த புதியதோர் வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஒரு நல்லிணக்க ஏற்பாடாகும்.

முஸ்லிம்கள் இன்றைய நாளில் செய்கின்ற பிரார்த்தனைகள் எமது எல்லா மக்களுக்கும் கௌரவத்துடனான சமாதானம் நீடித்து நிலைப்பதற்காகவுமிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எமது எல்லா முஸ்லிம் சகோதரர்களுக்கும் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த ஈத் முபாரக் வாழ்த்துக்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--