2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

ஏகாதிபத்திய நாடுகள் திட்டமிட்டு முஸ்லிம்களை அடக்க முனைகின்றன: அலவி மௌலானா

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 07 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகத்தின் வல்லரசு நாடுகள் என வர்ணிக்கப்படுகின்ற ஏகாதிபத்திய நாடுகள் பலவும் முஸ்லிம்களை திட்டமிட்டு அடக்கியொடுக்க முனைகின்றன என்று மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா தெரிவித்துள்ளார்.

இன்று காலை பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரியில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா அங்கு உரையாற்றுகையில்:

இன்று முஸ்லிம்களுக்கு பல சங்கங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் அசிங்கங்கள் பல இடம்பெறுகின்றன. தங்களுடைய பதவிகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சி முஸ்லிம்களின் பிரச்சினைகளில் தலையிட சிலர் தயக்கம் காட்டுகிறார்கள். இதற்குக் காரணம் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஐக்கியம் இன்மையே. முஸ்லிம்கள் ஐக்கியமாக செயற்பட்டால் இந்நாட்டில் அனைத்து நன்மைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

முஸ்லிம் மக்கள் மத்தியில் ஐக்கியம் குன்றியிருப்பதால்தான் ஏகாதிபத்திய நாடுகள் பலவும் முஸ்லிம்களை திட்டமிட்டு முடக்க முனைகின்றன. இன்றும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் தினமும் பல முஸ்லிம்கள் திட்டமிட்டு கொல்லப்படுகிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் தொழுகை நேரத்தில் பல முஸ்லிம்களை பலிகொள்கிறது ஏகாதிபத்திய நாடுகளின் சதித்திட்டம். உதாரணமாக சதாம் ஹுஸைன் சிங்கம்போல் வாழ்ந்தவர். அவரையே திட்டமிட்டு பழிவாங்கியது ஏகாதிபத்தியம். இதற்கும் முஸ்லிம்களின் ஐக்கியமின்மைதான் காரணம். ஆகையினால் முஸ்லிம்கள் எப்பொழுதும் ஐக்கியமாக வாழவேண்டும்.

இன்று எமது நாடாளுமன்றத்தில் பார்த்தீர்களேயானால் எதிர்க்கட்சியில் முஸ்லிம்கள் அரிது. இது ஆரோக்கியமானதுதான். தமது சமூகத்திற்கு நல்லது செய்யவேண்டுமானால் அரசுடன் இருப்பதுதான் சிறந்தது. அதற்காக தமது சுயலாபத்திற்காக யாரும் கட்சிமாறக்கூடாது என்பது எனது பணிவான கருத்து.

இன்று முஸ்லிம்களின் பிரச்சினைகளைப்பற்றி பேசுவதற்கு யாரும் யோசிப்பதில்லை. ஏனெனில் பெரும்பாலானோர் தங்களுடைய இருப்பை தக்கவைப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். இந்நிலை மாறி பதியுதீன் முஹம்மது, ரி.பி.ஜயா போன்ற அரசியல் பெருந்தலைவர்கள்போல் எமது முஸ்லிம் அரசியல்வாதிகளும் சமூகத்தினைப்பற்றி சிந்திப்பவர்களாக உருவெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். Pix: Nisal Baduge


  Comments - 0

 • ajan Tuesday, 07 December 2010 11:09 PM

  பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகளில் இடம்பெறும் அடக்குமுறை போலத் தான் தமிழர்களுக்கும். இதை தான் தமிழர்களும் விரும்பவில்i எதற்க்கு இந்த அடகு முறை ? எதற்கு இந்த இன துவேசம் ? எல்லோருக்கும் எல்லாம் கிடைத்தால் இங்கு போராட்டம் என்ற பேச்சிக்கே இடம் கிடையாது அதை ஆளும் வர்க்கம் இன்னும் உணரவில்லை என்பது தான் கேட்ட நேரம். அதற்காக எதிரான போராட்டம் தான் தமிழர்களின் போராட்டமும் என்பதை விளங்கிகொள்ளுங்க.

  Reply : 0       0

  acord4 Tuesday, 07 December 2010 11:22 PM

  அலவி ஹாஜி, குர்பான் குடுக்க மாடு அறுக்க முடியாது என்று நாங்க சொல்ல இல்லை. உங்கள் கட்சி தான் சொல்லுது. அதை சரி பண்ணிட்டு மற்றதை பேசலாமே.

  Reply : 0       0

  xlntgson Wednesday, 08 December 2010 09:10 PM

  கால்நடைகளை அறுத்துப்பலியிடுவதைத்தான் எதிர்க்கின்றனர், அதை அறுத்துச் சமைப்பதற்கல்லவாம்!
  சில இடங்களில் பெருநாள் கழித்து 3 நாள் விகாரையிலோ பொலீசிலோ கட்டிவைத்திருந்து பின்னர் கொடுத்திருக்கின்றனர்.
  அந்த பெருநாள் நிமித்தம் இறைவனின் பெயரால் அறுக்கககூடாதாம் அதன் பின் அறுத்து ஆக்கி அவர்களுக்கும் அனுப்பினால் பிரச்சினை இல்லை!
  பிள்ளைகள் பிறந்ததன் நேர்ச்சையாக பெண் பிள்ளைக்கு 1 ஆண்பிள்ளைக்கு 2 ஆடுகள் என்பது இதில் சேர்த்தி இல்லை.
  அதாவது மதச்சடங்காகக் கொள்ளப்படுவதில்லை.
  எல்லாம் இறைவன் பேரால் தான் அறுக்கப்படும்!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--