2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

இலங்கை அரசின் தீர்மானம் புண்பட்ட தமிழர் மனங்களை மேலும் காயப்படுத்தும்: கருணாநிதி

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 13 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதத்தை பாடுவதான இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தால் தமிழ் மக்களின் மனங்கள் மேலம் புண்படுத்தப்படுகின்றன. இலங்கை அரசாங்கத்தின் இந்தச் செயல் கண்டனத்துக்குரியது  என்று தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக  முதல்வர் கருணாநிதி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- "இலங்கையில் தமிழ் மக்களும் சிங்களவர்களும் வசிப்பதால் அந்த நாட்டு தேசிய கீதம் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் இதுவரை பாடப்பட்டு வந்தது.

இந்த நடைமுறை மாற்றப்பட்டு இனிமேல் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்றும் தமிழில் தேசிய கீதம் பாடுவதை ரத்து செய்து விட்டதாகவும் அதற்கான தீர்மானம் அமைச்சரவையிலும் நிறைவேற்றப்படிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த செய்தி உண்மையானால் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது.  புண்பட்டிருக்கின்ற தமிழர்களின்  உள்ளத்தை மேலும் புண்படுத்தக் கூடியது.  எனவே இந்த செயலை கண்டிக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.


  Comments - 0

 • xlntgson Monday, 13 December 2010 08:46 PM

  இதைப் பெரும் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு இது தான் நமக்கு படி அளக்கப்போகிறது என்றோ நமது அந்தஸ்தை கூட்டப் போகிறது என்றோ நினைக்கத்தேவை இல்லை. அரசியல் வாதிகள் முக்கியமாக மு.க., வைகோ போன்ற அரசியல் வாதிகள் அழும் பிள்ளைக்கு சூப்பியைக் கொடுப்பது போல் பெயர் மாற்றங்களையும் தமிழ் மாநாடுகளையும் பற்றி பேசிக்கொண்டே இருப்பர். ஜெஜெயோ கண்ணகி சிலை வாஸ்து சரியில்லை என்பார். உண்மையில் ஜனகனமன அநேகமான இடங்களில் இசை வடிவில் மட்டுமே ஒலிக்கப்படுகிறது. எல்லாரும் அசையாமல் நிற்கின்றனர் ஜெயஹே வரைக்கும். ஜெயஹிந்த் கூட போதும்!

  Reply : 0       0

  xlntgson Friday, 17 December 2010 09:27 PM

  "நீதான் எங்களின் மனத்தில் நிறைந்து இருக்கின்றாய்.
  உனது பெயர் இமயத்தில் எதிரொலிக்கிறது.
  எல்லா நதிகளும் உன் பெயரை ஒலித்துத்தான் ஓடுகிறது.
  உன் புகழ் ஆசியாவிலும் உலகிலும் ஓங்கும்!"
  உனக்கு வெற்றி என்பதே தேசியகீதம்.
  இது எளிமையான ஒரு பாடல். பாரதத்தை பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டா, திராவிட, உத்கல், வங்க, விந்திய, ஜமுனா, கங்கா என்கிறார் தாகூர்.
  சிந்து பாகிஸ்தான் ஆகிவிட்டது.
  திராவிட என்று எல்லாரையும் தமிழர் கன்னடர் தெலுங்கர் ஒரியர்கள் ஏன் இலங்கையைக்கூட ஒற்றுமைப்படுத்திவிட்டார் என்றே கூறலாம்.
  வந்தேமாதரம் வங்காளி.

  உனது பெயர் இமயத்தில் எதிரொலிக்கிறது.
  எல்லா நதிகளும் உன் பெயரை ஒலித்துத்தான் ஓடுகிறது.
  உன் புகழ் ஆசியாவிலு...')">Reply :
  0       0

  xlntgson Sunday, 19 December 2010 08:57 PM

  சோமசந்திர சட்டர்ஜியின் வந்தேமாதரமும் தேசிய கீதமாக இசைக்கப்பட அனுமதி உண்டு. பீஜெபிகாரரகள் அதைத் தான் விரும்புவர். சாரா சகான் ஹே அச்சா என்னும் அல்லாமா இக்பாலின் கவியும் இசைக்க அனுமதி உண்டு.
  (தாய் மண்ணே வணக்கம் என்று மொழிபெயர்த்து ஏ ஆர் ரஹ்மான் பாடுவது வந்தே மாதரத்தின் தமிழாக்கம் ஆகும்)
  உத்தியோகபூர்வமானது நோபெல் பரிசுபெற்ற இலக்கியவாதியும் கல்விமானுமாகிய ரபீந்திர நாத் தாகூரின் ஜன கண மன அதிநாயக... என்று தொடங்கும் கீதாஞ்சலியாகும்!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--