Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 டிசெம்பர் 15 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை கொலை செய்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிடுவதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் இன்று மாலை எச்சரிக்கை விடுத்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏறத்தாழ அழித்தொழிக்கப்பட்டுவிட்ட எல்;.ரி.ரி.ஈ. மீண்டும் ஒன்றிணைவதற்கு முயற்சிப்பதுடன் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி ஆகியோரை இலக்குவைத்து பாரிய தாக்குதல்களை தொடுப்பதற்கும் திட்டமிடுவதாக அச்செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின்போது தப்பிச்சென்ற எல்.ரி.ரி.ஈ. அங்கத்தவர்கள் சிலர் இந்தியாவில் மீளிணைவதற்கும் முக்கிய அரசியல் தலைவர்கள் தமிழ் நாட்டிற்கு விஜயம் செய்யும்போது அவர்களை கொலை செய்வதற்கு முயற்சிப்பதாகவும் புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளனவாம்.
இந்தியாவின் முன்னாள் பிரமர் ராஜிவ் காந்தி, 1991 ஆம் ஆண்டில் தமிழகத்தில் எல்.ரி.ரி.ஈ. தற்கொலைப் படையினரால் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்திய புலனாய்வுப் பிரிவினர் இத்தகவல்களை தீவிரமாக கருத்திற்கொண்டுள்ளனர். இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அடுத் மாதம் தமிழ் நாட்டிற்கு விஜயம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
23 minute ago
28 minute ago
4 hours ago
6 hours ago
thilak Thursday, 16 December 2010 03:36 AM
இப்படி கூறுபவர்களுக்கும் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று கூறுபவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
Reply : 0 0
koneswaransaro Thursday, 16 December 2010 05:31 AM
இலங்கையர்களைப் போல் இந்தியர்களும் புலிகளின் பெயரைப் பயன்படுத்தித்தான் அரசியல் செய்வது அநாகரிகத்தின் உச்சம்.
Reply : 0 0
nagendran Thursday, 16 December 2010 07:06 PM
இந்த செய்தி ஒட்டு மொத்த தமிழர்களையும் அவமதிக்கும் சூழ்ச்சி
Reply : 0 0
xlntgson Thursday, 16 December 2010 08:59 PM
பிரதமர்,முதல்வரின் பாதுகாப்புவலயத்துக்குள் புலிமிச்சங்கள் நுழைந்துவிடமுடியும் என்பதில்லை,அவர்களாகவே வரவழைக்காவிட்டால் ஆனால் ஜெயலலிதாவை பல முறை (அவரது மாளிகையிலேயே அவரது படுக்கை அறைக்கு அண்மித்து) நெருங்கி மயிரிழையில் தப்பினாராம்,கொன்றிருந்தால் அதை கருணாநிதிகள் மீது போட்டிருக்க ஏதுவாக இருந்திருக்கும். பொதுவாக பயங்கரவாதிகள் எவ்வளவு மோசமான கொலையை செய்தாலும் அவர்கள் கெரில்லாக்கள்தானே என்று மன்னிக்கும் அதேவேளை அதை விட குறைந்த கொலைக்குற்றத்தை படையினர் செய்தால் மன்னிக்க முடியாது என்பதும் மேற்கின் யுக்தி.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
28 minute ago
4 hours ago
6 hours ago