Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 டிசெம்பர் 15 , பி.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கெலும் பண்டார)
தமது நாடுகளில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பான விசாரணைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து சென்றதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், இத்தாலியத் தலைநகர் ரோமிலுள்ள இலங்கைத் தூதரகம் அங்கு 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட எல்.ரி.ரி.ஈ. செயற்பாட்டாளர்கள் மீது வழக்குத் தொடரப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக இத்தாலிய, இலங்கை முகவரகங்களுடன் தொடர்ச்சியாக இணைந்து செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
'நெதர்லாந்தின் ஹேக் நகரிலுள்ள தூதரகம்; நெதர்லாந்தின் பயங்கரவாத எதிர்ப்புப் பணியகம் மற்றும் வழக்குத் தொடுநர் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து செயற்பட்டது. நெதர்;லாந்திலிருந்து கடந்த ஜுலை மாதம் தூதுக்குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்தது.
பெல்ஜியத்திலிருந்து தூதுக்குழுவொன்று இவ்வருடம் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வந்தது.
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் சேர்ப்பதற்காக பல்கேரியாவின் உதவியை இலங்கை நாடியிருந்தது.
அதேவேளை, சுவிட்ஸர்லாந்திலிருந்து அந்நாட்டு சட்டமா அதிபர் திணைக்களம் சமஷ்டி கிரிமினல் பொலிஸ் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றும் எல்.ரி.ரி.ஈ. செயற்பாடுகள் குறித்து கடந்த ஜூலை மாதம் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது' எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 minute ago
19 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
52 minute ago