Super User / 2010 டிசெம்பர் 17 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.சுகந்தினி)
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான அடிப்படைத் தீர்வுத்திட்டத்தை தயாரிப்பதற்கான உப குழுவுக்கு தமிழ்க் கட்சிகளின் அரங்கம் மூவரை நியமித்துள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியும் வன்னியை பிரதிநிதித்துவப்படுத்தி புளொட் அமைப்பின் தலைவர் ரி.சித்தார்த்தனும் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கமும் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
தமிழ்க்கட்சிகளின் அரங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இடையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சந்திப்பையடுத்து இரு தரப்பிலும் தலா மூவர் கொண்ட உபகுழுவை நியமிப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஏற்கெனவே இக்குழுவுக்கு மூவரை நியமித்துள்ளது. இதேவேளை உபகுழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை இரு தரப்பிலிருந்தும் தலா 5 ஆக அதிகரிக்க வேண்டுமென தமிழ்கட்சிகளின் அரங்கம் வலியுறுத்தியுள்ளது.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025