Super User / 2010 டிசெம்பர் 21 , மு.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் பல குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனவும் அக்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு சர்வதேச மட்டத்தில் பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தியத்தலாவை இராணுவ கல்லூரியின் பயிற்சி பெற்ற 253 அதிகாரிகள் பயிற்சியை முடித்துக்கொண்டு வெளியேறும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இதில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன்போது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறியதாவது,
'இராணுவத்தினர் நாட்டில் அமுலிலுள்ள சட்டங்கள் மற்றும் இராணுவ சட்டங்களுக்கு உட்பட்டவர்கள். அதனால் அந்த சட்டங்களுக்குட்பட்ட தண்டனைகளை அவர்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும். எந்தளவுக்கு திறமையானவராயினும் நாட்டின் மீது பற்று இல்லாவிடின் அவர் உயர்ந்தவரல்லர்.
பழிவாங்கும் எண்ணத்துடன் மனிதாபிமானத்துக்கு எதிராக எவருக்கும் எந்தவித தண்டனைகளும் வழங்கப்படக் கூடாது. இதேவேளை, யுத்தம் முடிந்துவிட்டாலும் அபிவிருத்தியின் மூலம் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
30 minute ago
47 minute ago
54 minute ago
1 hours ago
tamilan Wednesday, 22 December 2010 03:05 AM
சொல்வதெல்லாம் பொய்தானே! உண்மைகள் உறங்காது.
காலம் பதில் சொல்லும்.
Reply : 0 0
xlntgson Wednesday, 22 December 2010 09:09 PM
பொய் யார்தான் சொல்லவில்லை?
"மேற்குலகமே, எல்லாம் நடக்க விட்டுப் பார்த்துக்கொண்டு இருந்து விட்டு இப்போதென்ன, விசாரணை நாடகம்?", என்று கேட்க துணிவில்லை ஏன்? பிழைக்கப்போன இடத்தில் ஏன் அரசியல் என்ற கவனமா? இந்தியா குற்றம் இழைத்ததென்றால் வல்லரசுகள் கண்டிக்கவில்லை ஏன்? கூட்டுக்களவாணி யார்?
தீக்குளிக்கிறானாம் ஒருவன். அதை அணைக்க முயலாமல் அதை படம் எடுத்து உலகத்துக்கு அனுப்புகிறவன் தொண்டனாம்?
காதில் பூச்சுற்றுங்கள்!
"ஆண்டாண்டு காலம் அழுதாலும் மாண்டவர்கள் உயிர்பெற்று வரப்போவதில்லை" "செத்தவன் சாட்சி எடுபடாது"
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
47 minute ago
54 minute ago
1 hours ago