2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

மட்டு., அம்பாறைக்கு செல்ல அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் தீர்மானம்

Super User   / 2011 ஜனவரி 09 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிடவுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் மஹிந்த அபயவீர தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரித்தார்.

நாளை திங்கட்கிழமை அம்பாறை மாவட்ட செயலகத்திலும் நாளை மறுநாள் செவ்வாய்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும் இடம்பெறவுள்ள விசேட கூட்டங்களையடுத்தே பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்கும் படி பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கடும் மழை காரணமாக கிழக்கு மாகாணத்தில் 800 வீடுகள் முழு அளவிலும் 2960 வீடுகள் பாதியளவிலும் சேதமடைந்துள்ளதுடன் 790 000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மஹிந்த அபயவீர தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதற்காக 10 கடற் படையினரின் படகுகளையும் விமான படையினரின் விமானத்தையும் பெற்றிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் றிசாட் பதியுதீன் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண சேவைகளை துரிதப்படுத்துமாறு அனர்த்த நிவாரண சேவைகள் மஹிந்த அபயவீரவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--