2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

அ.புரத்தில் சிறுவர் இல்ல குழந்தைகளின் நலன்களை புறக்கணித்த இருவர் கைது

Menaka Mookandi   / 2011 ஜனவரி 10 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஒலிந்தி ஜயசுந்தர)

அநுராதபுரத்தில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றின் சிறுவர்களின் நலன்களை புறக்கணித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேற்படி இல்லத்தின் மேற்பார்வையாளர் மற்றும் உதவி மேற்பார்வையாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்தது. 

குறித்த சிறுவர்களுக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை எனவும் சிலசமயம் இவர்கள் உடலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் அனோமா திஸாநாயக்கா தெரிவித்தார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அவசர அழைப்பு இலக்கம் 1929க்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலேயே மேற்படி இரு சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று அனோமா திஸாநாயக்கா கூறினார்.

இந்நிலையில் மேற்படி சிறுவர் இல்லத்தின் நிர்வாகசபை கலைக்கப்பட்டு அது தற்போது நன்னடத்தை ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இல்லத்தின் மேற்பார்வையாளரும் அவரது உதவியாளரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் தகவல் வழங்கவதற்றாக 1929 என்ற அவசர அழைப்பு தொலைபேசி இலக்கம் ஏற்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரையில் 21,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் அனோமா திஸாநாயக்கா மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X