2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

அரசு - த.தே.கூ இன்று பேச்சுவார்த்தை

Super User   / 2011 ஜனவரி 10 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்குமிடையிலான பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்டதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் அரச தரப்பில் அமைச்சர்களான ரட்ணசிறி விக்ரமநாயக்க, நிமால் சிறிபால டி சில்வா மற்றும் ஜீ.எல்.பீரீஸ் ஆகியோரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதுபோன்ற சந்திப்புக்களை தொடர்ந்து நடத்துவதற்கு இதன் போது இணக்கம் காணப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

இது ஆரம்ப சுற்று பேச்சுவார்த்தையாகும். இதனை மேலும் முன்னெடுக்கவுள்ளோம் என்றார் அவர்.

அரசியல் தீர்வு தொடர்பில் அரசாங்கமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் பேச்சு நடத்த வேண்டும் என இந்திய அரசாங்கம் வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X