2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

ஏனைய கட்சிகளின் அங்கத்தவர்களுக்கு ஐ.தே.க. பட்டியலில் இடமில்லை

Super User   / 2011 ஜனவரி 11 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற ஏனைய கட்சிகளின் அங்கத்தவர்களை தனது யானைச் சின்னத்தின்கீழ் போட்டியிட அனுமதிப்பதில்லை என ஐ.தே.க. தீர்மானித்துள்ளதாக ஐ.தே.க. பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

303 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில்களிலும் ஐ.தே.க. போட்டியிடும் எனவும் இதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான இரண்டாவது நேர்காணல்கள் ஜனவரி 16, 17 ஆம் திகதிகளில் மாவட்ட மட்டங்களில் நடைபெறும் எனவும் செய்தியாளர் மாநாடொன்றில் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

தமது பதவிக்காலத்தில் ஒழுங்கு விசாரணைகளையோ குற்றச்சாட்டுகளையோ எதிர்கொள்ளாதிருந்த உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கு வேட்பாளர் தெரிவில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

'குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான இளைஞர்கள் மற்றும் பெண்களையும் நாம் நியமிப்போம். தொழிற்சார் நிபுணர்களையும் ஐ.தே.கவின் சார்பில் போட்டியிடுவதற்கு ஊக்குவிப்போம். ஆனால் ஏனைய கட்சிகளின் அங்கத்தவர்களை போட்டியிட அனுமதிக்கப்போவதில்லை. அப்படி போட்டியிட விரும்புபவரகள் முதலில் ஐ.தே.கவின் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என' அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  அணி மாறியதாலா இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என வினவப்பட்டபோது, நிச்சயமாக ஆம்  என அவர் பதிலளித்தார். ஏனைய கட்சிகளின் அங்கத்தவர்கள் என்பதால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள முடியாதிருந்தது. இத்தவறை நாம் மீண்டும் செய்யப்போவதில்லை எனவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--