2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

செவ்வி திரிபுபடுத்தப்பட்டதாக பொன்சேகா கூறினார்: ஊடகவியலாளர் சாட்சியம்

Super User   / 2011 ஜனவரி 11 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(பாரூக் தாஜுதீன், லக்மல் சூரியகொட)

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடந்த வெள்ளை கொடி வழக்கு விசாரணையின் போது 12ஆவது, 13ஆவது சாட்சியங்களை விசாரணை செய்த உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜயானந்தவையும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் அசேலவையும் 24ஆவது, 25ஆவது சாட்சியங்களாக சேர்த்து கொள்ளும்படி பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.

இவரது வேண்டுகோளை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இதேவேளை, 2009 டிசெம்பர் 14ஆம் திகதி  சரத் பொன்சேகாவின் தேர்தல் அலுவலகத்தில் சரத் பொன்சேகா நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் அவரின் உரையை பதிவு செய்ததாகவும் ஆனால் ஒளிப்பதிவில் செலுத்திய அக்கறையை ஒலிப்பதிவில் காட்டவில்லை என்றும் தனது வீடியோவை பதிவு செய்து சிரஸ ரிவியிடம் கையளித்ததாகவும் சிரஸ புகைப்பட ஊடகவியலாளரான நந்தன விமலசேன சாட்சியமளிக்கும் போது கூறினார்.

தனது வீடியோ பதிவு பின்னர் சிரஸவினால் செம்மையாக்கப்பட்டு  ஒலிபரப்பப்பட்டது என அவர் கூறினார். தனது வீடியோ பதிவு செய்த அரை மணித்தியாலம் தொடக்கம் ஒரு மணித்தியாலம் வரை ஓடக்கூடியதாக தான் இருந்தது என அவர் கூறினார்.

இந்த வீடியோவில் சரத் பொன்சேகா தான் பிரெட்ரிகா ஜேன்ஸிற்க்கு கூறிய விடயம் சன்டே லீடர் பத்திரிகையில் திரிபுபடுத்தி எழுதப்பட்டதாக கூறியமை பதிவாகி இருந்தது என நந்தன விமலசேன கூறினார்.

வழக்கு விசாரணை நாளை புதன்கிழமையும் தொடர்ந்து நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .