2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

ஜனாதிபதியின் கிழக்கு மாகாண விஜயம் கைவிடப்பட்டது

Super User   / 2011 ஜனவரி 12 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு மேற்கொள்ள விருந்த விஜயம் சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காகவும் நிவாரண விநியோகங்களை ஆரம்பிப்பதற்காகவும் பொலன்னறுவை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு இன்று காலை விஜயம் செய்ய ஜனாதிபதி திட்டமிட்டிருந்தார்.

பொலன்னறுவைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து மெதிரிகிரிய லங்காபுர மகா வித்தியாலத்தியத்தில் தங்கியுள்ள 3000 மக்களை பார்வையிட்டு நிவாரணங்களையும் வழங்கினார். எனினும் சீரற்ற காலநிலை காரணமாக பொலன்னறுவைக்கு அப்பால் அவர் செல்ல முடியாமல் அவர் கொழும்புக்குத் திரும்பினார்.

இதேவேளை , சுற்றுநிருபங்களுக்குள் கட்டுப்பட்டிருக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சகல உதவிகளையும் வழங்கும்படி ஜனாதிபதி அதிகாரிகளை பணித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X