2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

வெள்ளத்தில் பல்கலைகளுக்கும் சேதம்

Super User   / 2011 ஜனவரி 17 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

கிழக்கில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் தென் கிழக்கு பல்கலைக்கழகம் என்பன கடுமையான முறையில் பாதிக்கப்பட்டுள்ளன.

தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு சுமார் 41.8 மில்லியன் ரூபா பெறுமதியான சேதம் ஏற்பட்டதாக தென் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எம்.எம்.இஸ்மாயில் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் நூலகம், கணனி அறை மற்றும் வகுப்பறைகள் ஏன்பன வெள்ளத்தில் மூழ்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். கழியோடை ஆறு ஊடறுத்ததனாலேயே இந்த பாதிப்பு ஏற்பட்டது. மீண்டும் இவ்வாறு ஏற்படாமலிருக்க அணைக்கட்டு நிர்மாணிக்கப்படவுள்ளதாக உப வேந்தர் எம்.எம்.இஸ்மாயில் கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் கிழக்கு பல்கலைக்கழகத்தை மலேசிய நாட்டு மலாக்கா முதலமைச்சர் முஹம்மட் அலி பின் முஹம்மட் ருஸ்தான் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டதுடன் எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்தின் அபிருவிருத்தி நடவடிக்கைகளுக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளார் என அவர் குறிப்பிட்டார்.

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் அடுத்த வாரமளவில் ஆரம்பமாகும் என கலாநிதி இஸ்மாயில் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, வெள்ளம் காரணமாக கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு சுமார் 100 மில்லியன் தொடக்கம் 150 மில்லியன் ரூபா பெறுமதியான சேதம் ஏற்பட்டுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழக பதில் உப வேந்தர் கலாநிதி கே.பிரேம்குமார் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

வெள்ளத்தின் காரணமாக அச்சக பகுதி, நூலகம், வகுப்பறைகள் என்பன சேதமடைந்ததாக அவர் குறிப்பிட்டார். றைகம் குளம் மற்றும் உன்னிச்சை குளம் என்பவற்றின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டமையினாலேயே பல்கலைக்கழகத்தினுள் வெள்ளம் ஏற்பட்டதாக உப வேந்தர் கூறினார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் அடுத்த வாரமளவில் ஆரம்பமாகும் என அவர் குறிப்பிட்டார்.

வெள்ளத்தின் காரணமாக பல்கலைக்கழகத்தின் சுவர் இடிந்து விழுந்ததுடன் பல கட்டிடங்களை மீள் நிர்மாணம் செய்யவேண்டியுள்ளதாக கலாநிதி கே.பிரேம்குமார் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--