2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி

Super User   / 2011 ஜனவரி 18 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு தொலை மாநாட்டின் ஊடாக இணையத்தளம் மற்றும் மின்னஞ்சல் தொடர்பான ஒரு நாள் பயிற்சி பட்டறையை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி தகவல் திணைக்களம் நடத்தவுள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள 20 தொலைக் கல்வி நிலையங்கள் ஊடகவே இந்த பயிற்சி பட்டறை நடத்தப்படவுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழக கணனி பீடத்தின் சிரேஷ்ட வரிவுரையாளர்கள் கொழும்பு, கம்பஹா, காலி, இரத்தினபுரி, அம்பாறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா, திருகோணமலை, பதுளை, அனுராதபுரம், மொனராகலை, ஹம்பாந்தோட்டை, கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாட்டங்களில் பெப்ரவரி முதலாம் திகதி குறித்த பயிற்சி பட்டறை நடைபெறவுள்ளது.

இப்பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள விரும்பும் பிராந்திய ஊடகவியலாளர்கள் பணிப்பாளர் நாயகம், தகவல் திணைக்களம், கொழும்பு 5 என்ற முகவரிக்கு சுயமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை எதிர்வரும் ஜனவரி 21ஆம் திகதிக்கு முன்னர் அனுப்புமாறு கோரப்பட்டுள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--