2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பல்கலை மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவ பயற்சி

Super User   / 2011 ஜனவரி 18 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

உயர் கல்வியமைச்சு, பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து அடுத்த தொகுதி பல்கலைக்கழக மாணவர்களுக்கு இரு வாரகால தலைமைத்துவ பயிற்சியை வழங்கத் தீர்மானித்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட இராணுவ முகாம்களில் இப்பயிற்சிகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவர்கள் அனைவருக்கும் கருத்துக்களை முன்வைக்கும் திறமை, கற்பனை செய்தல், பிணக்குத் தீர்வு முதலானவற்றை முன்னேற்றிக்கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கும் என உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த டெய்லி மிரருக்குத்  தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்கள் ஓரணியாக செயற்படுவதும் எதிர்வரும் மே மாதம் ஆரம்பமாகவுள்ள இப்பயிற்சிகளின் மூலம் முன்னேற்றமடையும் என அவர் கூறினார்.

'மற்றவர்களிடமிருந்து செவிமடுத்தல், தீர்மானங்களை மேற்கொள்ளல் போன்ற தலைமைத்துவப் பண்புகளை அதிகரிக்க வேண்டும். நாட்டை அபிவிருத்தி  செய்வதற்கு சிறந்த தலைவர்கள் எமக்குத் தேவை. சிறந்த தலைவர்கள் இன்றி நாட்டைஅபிவிருத்தி செய்ய முடியாது என கலாநிதி சுனில் ஜயந்த தெரிவித்தார்.

'இராணுவ முகாம்களில் இப்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதால் தப்பிப்பிராயமொன்று உள்ளது. 20,000 மாணவர்களை ஒரே சமயத்தில் தங்கவைப்பதற்குரிய வசதியைக் கொண்ட ஒரே இடம் என்பதாலேயே நாம் இராணுவ முகாம்களை தெரிவு செய்தோம்' எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X