2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

புதிய அரசியல் கட்சிகளாக பதிவுசெய்வதற்கான அனைத்து விண்ணப்பங்களும் நிராகரிப்பு

Super User   / 2011 ஜனவரி 20 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புதிய அரசியல் கட்சிகளாக பதிவு செய்வதற்கு தேர்தல்கள் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த 86 விண்ணப்பங்களும் தேர்தல்கள் ஆணையாளரினால்  நிராகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகளாக அங்கீகரிக்கப்படுவதற்குத் தேவையான  நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாமையே இதற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி,  . என் . ஸ்ரீகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு உட்பட பல கட்சிகள் அரசியல் கட்சிகளாக பதிவு செய்வதற்கு விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X