Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜனவரி 22 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
குற்றங்களுக்கு பதில்கூறும் நிலைமை தேசிய நல்லிணக்கத்திற்கு அவசியம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதேவேளை, அமெரிக்காவுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அமெரிக்க ராஜாங்கத்திணைக்கள அதிகாரிகள் எவரையும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்படவில்லை என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் பி.ஜே.க்ரோவ்லி தெரிவித்துள்ளார். .
நேற்று நடைபெற்ற அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் செய்தியாளர் மாநாட்டில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே க்ரோவ்லி இவ்வாறு கூறினார்.
மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் குறித்து அமெரிக்க ராஜாங்கப் பேச்சாளரிடம் கேட்டபோது, இவ்விடயத்தில் இலங்கை மேற்கொள்ளும் செயன்முறைகளை அமெரிக்கா ஆதரிப்பதாக பதிலளித்தார்.
'இலங்கை மேற்கொள்ளும் செயன்முறைகளை நாம் ஆதரிக்கிறோம் என்பதை நாம் வலியுறுத்திக் கூறியுள்ளோம். இச்செயன்முறை இன்னும் இடம்பெற்றுவருகிறது.
சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறியவர்கள் அவற்றுக்குப் பொறுப்பாளிகளாக்கப்பட வேண்டும் என நாம் திடமாக நம்புகிறோம். இடம் பெற்றதாகக் கூறப்படும் குற்றங்களுக்கு பதில் கூறும் நிலைமை இலங்கையின் தேசிய நல்லிணக்கத்திற்கு அவசியமானதென நம்புகிறோம்' என க்ரோவ்லி கூறினார்.
ஐ.நா. நிபுணர் குழுவுக்கான எதிர்ப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் கைவிட வேண்டும் என அமெரிக்கா கருதினால் ஏன் நீங்கள் அவரை சந்திக்கக் கோரவில்லை என க்ரோவ்லியிடம் கேட்டபோது. மேற்படி செயன்முறைகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை நாம் காத்திருந்து பார்ப்போம். குறைபாடுகள் இருப்பின் அதைக் கூறத் தயங்கமாட்டோம் என பதிலளித்தார்.
23 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago