2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

உருளைக் கிழங்குகளில் போதை

Super User   / 2011 ஜனவரி 23 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புகையிலை, பீடி, நிகோட்டின் மற்றும் ஏனைய போதைத் துகள்கள் அடங்கிய இரு கொள்கலன்களை கொழும்பு துறைமுகத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

உருளைக் கிழங்குகளுடன் சேர்த்து பொதி செய்யப்பட்டு இப்போதைப்பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி சுமார் 80 லட்சம் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பிலுள்ளதனியார் நிறுவனமொன்றினால் இவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலொன்றையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் மூலம் இவை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X