2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தெரிவு குறித்து சர்ச்சை

Super User   / 2011 ஜனவரி 23 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

போர் குற்ற சர்ச்சை காரணமாக அவுஸ்திரேலியாவுக்கான அடுத்த இலங்கை உயர் ஸ்தானிகரை நிராகரிக்கும் அழுத்தத்தை அவுஸ்திரேலியா அரசாங்கம் எதிர்கொள்வதாக அவுஸ்திரேலியாவின் சிட்னி மோர்னி ஹெரால்ட் பத்திரகை செய்தி வெளியிட்டள்ளது.

அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

முன்னாள் கடற்படைத் தளபதி திஸேர சமரசிங்க அவுஸ்திரேலியாவுக்கான உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐ.நா. கூறியுள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சு இந்நியமனத்தை பிரச்சினைக்குரியதாக கருதுகிறது என த ஹெரால்ட் அறிகிறது.

இலங்கையில் தமிழ் பிரிவிணைவாதிகளுடனான சிவில்யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசியல் தஞ்சம்கோரி நாட்டைவிட்டு விட்டு வெளியேறுவோர் மற்றும் குடிவரவு கட்டுப்பாடுகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை தடம்மாறச் செய்யும் அச்சுறுத்தலையும் இவ்விவகாரம் ஏற்படுத்தியுள்ளது.

சிவில் யுத்தம் முடிவுற்றபின் 2009 ஜுலை மாதம் இலங்கைக் கடற்படைத் தளபதியாக பதவியேற்ற திஸேர சமரசிங்கவுக்கு எதிராக குறிப்பான போர் குற்றச்சாட்டுகள் எவையும் சுமத்தப்படவில்லை.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--