Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Super User / 2011 ஜனவரி 24 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனக்குப் பிறந்த குழந்தையொன்றை சில மணித்துளிகளுக்குள் கொலை செய்தார் என்ற சந்தேகத்தின்பேரில் பஹ்ரெய்னில் பணியாற்றும் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
39 வயதான இப்பெண், குழந்தையின் வாயில் துணித்துண்டையொன்றை திணித்து கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கல்வ் டெய்லி நியூஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
கடந்த வியாழனற்று இக்கொலை இடம்பெற்றதாகவும் புதையா நகரில் தான் பணியாற்றும் வீட்டில் களஞ்சிய அறையொன்றில் சடலத்தை மறைத்துவைத்ததாகவும் அப்பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வழக்கத்துக்கு மாறாக நடந்துகொள்வதாக அப்பணிப்பெண்ணிடம் அவ்வீட்டின் உரிமையாளர் கேட்டபோது மேற்படி கொலைச் சம்பவத்தை அப்பெண் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தன்னுடன் காதல் தொடர்புகொண்டிருந்த ஆசிய நாட்டவர் ஒருவரே இக்குழந்தையின் தந்தை எனவும் அப்பெண் கூறியுள்ளார்.
இவ்விடயம் குறித்து பொலிஸில் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளதாக பஹ்ரெய்னுக்கான இலங்கையின் கௌரவ கவுன்ஸல் ஜெனரல் பி.பீ. ஹிகொட உறுதிப்படுத்தியுள்ளார். குருதிப்பெருக்கு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண் பின்னர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago