2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

அமைச்சர் டக்ளஸுக்கு முன்பிணை வழங்க இந்திய பொலிஸார் எதிர்ப்பு

Super User   / 2011 பெப்ரவரி 15 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழகத்தின் சூளைமேடு பொலிஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ள ஒரு கொலை வழக்கு  தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு முன்பினை வழங்குவதற்கு இந்திய பொலிஸார் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.

1986 ஆம் ஆம் ஆண்டு சென்னையில் இடம்பெற்ற ஒரு கொலை தொடர்பாக முன்பிணை கோரி, தற்போது  இலங்கை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா சென்னை மேல் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவுக்கான பதில் மனுவை சூளைமேடு பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஷிபுகுமார் தாக்கல் செய்துள்ளார். அதில், 3 ஆவது குற்றவாளியாக காட்டப்பட்டு இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவிறாந்து இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் ஆஜராகாததற்கு தகுந்த காரணங்களைக் கூறி செசன்ஸ் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே அவரது முன்பிணை மனுவை மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.என்.பாஷா, விசாரணையை மற்றொரு நீதிமன்றத்துக்கு மாற்றும்படி உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .