2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையில் இந்திய மீனவர்கள் கைது; விடுவிக்க கோரி தமிழகத்தில் ஆர்பாட்டம்

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 16 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழ். பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் 106பேரையும் விடுவிக்கக் கோரி சென்னையிலுள்ள இலங்கை தூதரகம் முன்பு இன்று ஆர்பாட்டமொன்றை நடத்த தி.மு.க.வினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் மாநிலத்திலுள்ள அனைத்துத் துறைமுகங்கள் முன்னிலைகளிலும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தி.மு.க. விடுத்துள்ள அறிக்கையில், 'இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி தந்தி அனுப்பினார். இந்த விடயத்தில் பிரதமரின் தனிப்பட்ட தலையீடு அவசியம் என்றும் முதல்வர் வலியுறுத்தினார்.

இதையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உத்தரவின்பேரில் வெளியுறவு செயலர் நிருபமா ராவ் இலங்கை சென்று அந்நாட்டு அரசுடன் பேச்சு நடத்தினார்.

இந்நிலையில், நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 18 மீன்பிடிப் படகுகளும் 106 மீனவர்களும் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம், பருத்தித்துறை அருகே சிறை வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது

இலங்கைக் கடற்படையின் இந்தச் செயலைக் கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரியும் சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம் முன்பு இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதேவேளை, மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதன்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக நாகப்பட்டினம், காரைக்கால் பகுதி மீனவர்கள் அறிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--