Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 பெப்ரவரி 18 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சந்துன் ஏ. ஜயசேகர)
பொலன்னறுவையை சேர்ந்த 11 வயது சிறுமியொருவர் நேற்று முன்தினம் மென்பானம் அருந்தியதால் உயிரழந்தமையை தொடர்ந்து நாட்டில் மென்பான உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது உயர்மட்ட விசாரணையை மேற்கொள்ளும்படி சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த சிறுமியின் தாய், இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார்.
இந்த பிள்ளையின் மரணத்திற்கு காரணமானது என கூறப்படும் 'றிபிறெஷ் ஒறேஞ்ச்' என்னும் மென்பானத்தின் விற்பனையை தடைசெய்யும்படி அமைச்சர் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
பொலநறுவை மாவட்ட பொது சுகாதார பரிசோதகரை உடனடியாக வவுனியா சென்று றிபிறெஷ் ஒறேஞ் மென்பானத்தை விற்பனை செய்த கடையில் விசாரணை நடத்தும்படி சுகாதார பணிப்பாளர் நாயகம் அஜித் மென்டிஸ் பணித்துள்ளார்.
இதேவேளை சந்தேகத்துக்குரிய மென்பானம் உற்பத்தி செய்யப்பட்டதாக கூறப்படும் பியகமவில் உள்ள தொழிற்சாலைக்கு உணவு பரிசோதகர்கள் குழு ஒன்று சென்றபோது கதவுகள் பூட்டப்பட்டிருப்பதை கண்டனர். இந்நிலையில் தொழிற்சாலையை பார்வையிட தொழிற்சாலை உரிமையாளர் அனுமதிக்காவிடின் தொழிற்சாலைக்கு சீல் வைக்கும்படி அதிகாரிகளுக்கு இன்று காலை அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார். (Romesh Madusanka)
9 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago