Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 பெப்ரவரி 19 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
உள்நாட்டு வர்த்தக கூட்டுறவு பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் பயணித்த வாகனம் தம்புள்ளயில் வைத்து விபத்துக்குள்ளாகியமையால் மூன்று பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இன்று சனிக்கிழமை காலை ஏறாவூரிலிருந்து கொழும்பு நோக்கி பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் சென்று கொண்டிருந்தபோது தம்புள்ள பிரதான வீதியில் வைத்து அவர் பயணித்த வாகனம் மற்றும் அவருக்கு பாதுகாப்பு வழங்கிச் சென்ற மற்றுமொரு வாகனம், இராணுவ ட்ரக் ஒன்று, ஒரு கார் மற்றும் பஸ் ஆகியன விபத்தில் சிக்கியுள்ளன.
மேற்படி கார், நடிகைமேதா ஜயரட்ன பயணம் செய்த காராகும்.
இதன்போது தனக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லையெனவும் அதில் பயணித்த பொலிஸாருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும் பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
இந்த விபத்தின் போது தனது இரண்டு வாகனங்களும் முழுமையாக சேதமடைந்துள்ளதாக பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் மேலும் தெரிவித்தார்.
நடிகை மேதா ஜயரட்னவும் காயமின்றி தப்பியுள்ளார்.
mohammed Sunday, 20 February 2011 04:01 AM
நடிகை என்றால் கார்ல போறதையும் மறந்துட்டு போய் முட்டுறதா ? இதுகளுக்கு ஒரு அளவே இல்லையா ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago