Menaka Mookandi / 2011 பெப்ரவரி 22 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது இடம்பெயர்ந்த வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக கொத்தணி வாக்குச்சாவடிகள் அமைக்கப்படமாட்டாது என தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்தார்.
தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவுக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சி செயலாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்தையின் போதே தேர்தல் ஆணையாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியமர்த்தப்படாமல் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் - முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று வாக்களிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த இதன்போது உறுதியளித்தார்.
இதற்கு முன்னர் இடம்பெற்ற அனைத்து தேர்தல்களிலும் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் கொத்தணி வாக்குச்சவாடிகளிலேயே வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
7 hours ago
12 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
12 Jan 2026