Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 பெப்ரவரி 24 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேவையற்ற வார்த்தை பிரயோகங்களுடன் பிறர் மனதை புண்படுத்தும் விதத்தில் வெளிவந்த கிரிக்கெட் பாடலென கூறி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தடைசெய்யப்பட்ட பாடலை தான் பாடியதற்காக பாடகர் லஹிரு மன்னிப்பு கோரியுள்ளார்.
இப்பாடல் பாடியது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள மன்னிப்பு கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது...
'பொதுவாக எந்தவொரு நாட்டினது அணியினரோ அல்லது உள்ளூர் அணிகளோ விளையாடுகின்றபோது அவ்வணிகளை உற்சாகப்படுத்துவதற்காக இதுபோன்ற பாடல்களை இயற்றிப் பாடுவது வழமை. அந்தவகையில்தான் நானும் அந்த பாடலினை பாடியிருந்தேன். என்னுடைய வெற்றிபெற்ற பாடல்களின் பாணியிலேயே இப்பாடலும் அமைந்திருந்தது. இதன் மூலம் யாருடைய மனதினையும் புண்படுத்த நான் எண்ணவில்லை. இந்த பாடலினூடாக யாருடைய மனதோ அல்லது கட்சியினரோ புண்பட்டிருந்தால் அவர்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்.
எமது அணி வெற்றி பெறவேண்டும் என்ற ஆவலில் அவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் அமையப்பெற்ற 'என்ன' என்ற இப்பாடலின் வரிகளை மாற்றியமைத்து புதிய வடிவில் பாடலை வழங்குவதற்கும் நான் தயாராகவே இருக்கிறேன்..' என்றும் பாடகர் லஹிரு குறிப்பிட்டுள்ளார்.
39 minute ago
57 minute ago
xlntgson Friday, 25 February 2011 08:55 PM
மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது இம்மாதிரி அவசர கதியில் புதினமான வழமைக்கு மாற்றமான பாடல்களை எழுதும் போது யாரிடமாவது கலந்து ஆலோசிக்க வேண்டும் அடுத்த முறை என்னை கலந்து ஆலோசியுங்கள் பிரச்சினை வராது!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
57 minute ago