2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

உள்ளூராட்சிமன்ற தேர்தலால் அரசாங்கம் குழப்பத்தில்: அமைச்சர் ரம்புக்வெல்ல

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 25 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சந்துன்.ஏ.ஜயசேகர)

தேர்தல் ஆணையாளர், நேரத்துக்கு நேரம் தேர்தல் வேலைகளை நிறுத்தும்படி தனது திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை வழங்கிவருவதால் அரசாங்கமும் பொதுமக்களும் பெரும் குழப்பத்துக்கு உள்ளாகியிருப்பதாக அரசாங்கம் நேற்று தெரிவித்துள்ளது.

ஆரசாங்கம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்த வேண்டுமென்பதில் மிகுந்த அக்கறையாக உள்ளது என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பத்திரிகையாளருடனான வாராந்த சந்திப்பின்போது கூறினார்.

அரசாங்கம், தேர்தல்கள் ஆணையாளரின் தீர்மானத்தில் அல்லது நீதிமன்றத்திலுள்ள வழக்குகளில் தலையிடுவதில்லை. இவைப்பற்றி நாம் நாடாளுமன்றத்தில்கூட பேச்கூடாது. தேர்தல்கள் தொடர்பில் இனி நாம் என்ன செய்யப்போகின்றோம் என்பது பற்றி எம்மிடம் நிலைப்பாடும் இல்லை என அமைச்சர் கூறினார்.

தேர்தல்களை தள்ளிவைத்தமை தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மீது அரசாங்கம் செல்வாக்கை பிரயோகிக்கவில்லை என அமைச்சர் றம்புக்வெல்ல கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--