2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

சப்ரகமுவ பல்கலை மூடப்பட்டது

Menaka Mookandi   / 2011 மார்ச் 03 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சப்ரகமுவா பல்கலைக்கழகம் கால வரையரையின்றி இன்று காலை ஒன்பது மணி முதல் மூடப்பட்டதாக பல்கலையின் உபவேந்தர் கலாசூரி மஹிந்த ரூபசிங்க தெரிவித்தார். இந்நிலையில் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை இன்று காலையே வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பகடிவதையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பல்கலைக்கழக மாணவர்கள் 58 பேருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த 23ஆம் திகதி முதல் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே பல்கலைக்கழகம் கால வரையரையின்றி மூடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--