Suganthini Ratnam / 2011 மார்ச் 04 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அகதியொருவரை வாகனத்தால் மோதி விட்டு தப்பிச்சென்றுள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 31 வயதான ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையான நபரொருவருக்கு 8 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டான்டெனொங் எனும் பகுதியிலுள்ள புகையிரதக் கடவையில்; ஜரட் சுவான் என்பவரின் கார் மோதியதில் திருவடிவேல் ஸ்ரீஸ்காந்தராஜா என்பவர் பலியானார்.
குறித்த இலங்கை அகதி 27 மீற்றருக்கு அப்பால் தூக்கி எறியப்பட்டு அந்த இடத்திலேயே பலியானார். இவர் 6 மாதங்களுக்கு முன்னரே அவுஸ்திரேலியாவுக்கு வந்தவர் ஆவார்.
ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையான ஜரட் சுவான் விரைவாக காரை செலுத்தி வந்து காரை நிறுத்துவதற்கு தவறியதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.
8 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜராட் சுவான் குறைந்தபட்சம் 6 வருடகாலமாவது சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி நேரிடுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. (DM)
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago