Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மார்ச் 04 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஒலிந்தி ஜயசுந்தர)
கட்டிளமை பருவத்தினர் தம்மை கெடுதிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அவர்களுக்கு வலுவூட்ட பாடசாலை கலைத்திட்டத்தில் பாலியல் கல்வி, வீட்டு வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகம்,என்பன தொடர்பான கல்வியும் இடம்பெற வேண்டும் என சட்டத்துறை பேராசிரியரும் கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தருமான சாவித்திரி குணசேகர தெரிவித்தார்.
யுனிசெப் வெளியீடான 'உலக சிறுவர்களின் நிலை 2011' எனும் நூலின் அறிமுக விழாவின் போது அவர் இந்த கருத்தை வெளியீட்டார்.
10 – 18 வயதிற்குட்பட்டோரை கட்டிளமை பருவத்தினர் என குறிப்பிட்ட அவர், இச்சிறுவர்கள் தம்மை பற்றிய சரியான தீர்மானத்தை எடுக்க மேலே குறிப்பிட்ட விடயங்களில் கல்வியூட்டப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக சிறுவர்களுடன் பேசவது எமது கலாசாரத்திற்கு ஏற்புடையதல்ல என்ற அபிப்பிராயம் உண்டு. ஆனால் இவ்வகை கல்வி அவர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் என அவர் கூறினார்.
இளம் பிராயத்தினர் 16 வயதில் சுயமாக இயங்குவர். ஆனால் இதை இலங்கையர் பலர் அறிந்திருக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
இந்த உண்மை மதிக்கப்பட்டால் சிறுவர் உரிமையை மீறுதல் தொடர்பான பல பிரச்சினைகள் தீர்க்கப்படும் என அவர் கூறினார்.
இலங்கையில் மூன்று மில்லியனுக்கு மேற்பட்ட கட்டிளமை பருவத்தினர் உள்ளனர். 15 – 19 வயதுக்குட்பட்ட பெண்களில் 54 சதவீதமானோர் கணவன் மனைவியை அடிப்பதை நியாயப்படுத்தினர் என இலங்கைக்கான யுனிசெப் அறிக்கை 2011 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
40 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago
3 hours ago