2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

இலங்கை மீது பொருளாதார தடை; தமிழக சட்டசபையில் தீர்மானம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 08 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று சட்டசபையில் முன்வைத்தார். இந்த தீர்மானம் மீதான விவாதத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டதுடன் தி.மு.க.வினரும் ஆதரவு தெரிவித்தனர்.

மேற்படி தீர்மானத்தை முன்வைத்து பேசிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது, 'இலங்கையில் போர்க் குற்றம் புரிந்தவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். இன்னமும் இலங்கை முகாம்களில் தங்கியுள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்ய வேண்டும்.

தமிழ் மக்களுக்கான அனைத்து குடியுரிமைகளையும் அவர்கள் பெற்றுக்கொள்ளும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை இந்திய அரசை கேட்டுக் கொள்கிறது.

இலங்கை அரசு யாருக்கும் பணியவில்லை. அங்கே வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களர்களோடு அனைத்து உரிமைகளையும், குடியுரிமைகளையும் வழங்க வேண்டுமென்று இந்தியா சொன்னாலும், யார் சொன்னாலும், அவர்கள் அதை மதிக்கவில்லை.  அதனால், அவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது?

அவர்களை வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரே வழி பொருளாதாரத் தடைகள்தான்.  இதுவொரு தற்காலிகமான முறைதான். இந்திய அரசும், இன்னும் சில நாடுகளும் இணைந்து, இலங்கை அரசின்மீது ஒரு பொருளாதாரத் தடையை விதித்தால் குறுகிய காலத்திற்குள்ளேயே நாம் சொல்வதை இலங்கை அரசு கேட்டுத்தான் ஆக வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்படும். வேறு வழியில்லை என்பதற்காகத்தான் இந்த யோசனையை முன்வைத்திருக்கிறோம்.

ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், ஒரு குழுவை நியமித்து, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களைப் பற்றி ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று தெரிவித்தார். அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மீது இத்தகைய குற்றங்களெல்லாம், கொடுமைகளெல்லாம் நிகழ்த்தப்பட்டன என்பதையெல்லாம் தெரிவித்துவிட்டு, இதனை இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்றுதான் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். தவிர, இக்குற்றங்களை உறுதி செய்யவில்லை.

இலங்கை ஜனாதிபதியோ அல்லது மற்றவர்களோ போர்க் குற்றவாளிகள் என்று ஐ.நா. சபை அறிவிக்கவும் இல்லை. அதனால்தான் இந்தத் தீர்மானத்தில் இந்திய அரசு போர்க் குற்றம் புரிந்தவர்களை, போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த வேண்டும், இதற்கு ஐ.நா. சபையை வலியுறுத்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம்.

எனவே, மனிதாபிமானமற்ற முறையில்இரக்கமின்றி பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்.

இலங்கையில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழு மறுவாழ்வு அளித்து, அவர்கள் வசித்த இடங்களிலேயே அவர்களை மீண்டும் குடியமர்த்தி; சிங்களர்களுக்கு உரிய அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு வழங்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுவரையில் மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி, அரசு சார்பில், என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தினை இந்த மாமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என்று ஜெயலலலிதா மேலும் கூறியுள்ளார்.


  Comments - 0

 • rich Wednesday, 08 June 2011 08:33 PM

  good good

  Reply : 0       0

  shanker Wednesday, 08 June 2011 09:31 PM

  தமிழ் நாட்டு தலைவர்கள் எப்போதும் தாம் கோமாளிகள் என்பதை ஏனோ அடிக்கடி நினைவு படுத்துகிறார்கள்...

  Reply : 0       0

  asker Wednesday, 08 June 2011 10:22 PM

  கழுதைக்கு தெரியுமா கர்ப்பூரத்தின் வாசனை இநம் நாடு நமக்கே. புலி யாரு பூனை யாரு என்று பார்க்கமுடியாது. இப்பதான் எல்லாம் இனங்களுக்கும் நிம்மதி. மரத்தில் நாட்டியவுடன் காய்கள் வளராது. இன்னும் பத்து வருடத்தில் தெரியும்.

  Reply : 0       0

  ajan Wednesday, 08 June 2011 10:37 PM

  நன்றி. வரவேற்கதக்க செயல்பாடு.
  இந்த தீர்மானத்தின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்று போக போக தெரியும். அப்போ புரியும் யார் கோமாளி என்று.

  Reply : 0       0

  Hot water Wednesday, 08 June 2011 11:02 PM

  மரத்தில் நாட்டினால் 10 வருடங்கள் சென்றாலும் காய்கள் வளராது. மண்ணில் நாட்டினால்தான் வளரும்.

  Reply : 0       0

  akkarai Thursday, 09 June 2011 12:53 AM

  @ Ajan, இங்க ஒன்னையும் உசுப்ப முடியாது,,, அந்த கூத்தாடி கூட்டத்தால்.
  அவங்க காசுக்கு மாரடிக்கதான் சரி, இனி புலியும் வராது பூனையும் வராது. இவ்வளவு பிரச்சினைக்கும் அந்த இந்தியதான் காரணம், ஏன் அவங்க இராணுவம் மட்டும் தமிழ் மக்களை சும்மாவா விட்டாங்க??? இது நம்ம வீட்டு பிரச்சினை இதை நாம் பார்த்துக்குவோம் சரியா,
  அவங்க இனி இருக்கிற 5 வருடத்துக்கு மக்களின் காசை சுருட்டுறதுக்கு இப்படி எல்லாம் நாடகம் போடுவாங்க அதை அந்த தமிழ் நாட்டு மக்கள் மட்டும் தான் நம்புவாங்க இந்த உலகம் இல்லை........

  Reply : 0       0

  FATHIMAFARHA Thursday, 09 June 2011 04:47 AM

  புலி இலங்கை MAKKALAI GUNDU VAITHU KOLLUM BOTHU YARU VANTHA?
  MUTHALAVATHU INDIYA TAMILARHALLA PAKKAVA VAKKILA IPPIDIYALLAM NADAHAM ADDI MAKKALDA PANNATHA SURITI ODATHAN INDHA NADAHAM

  Reply : 0       0

  Tamil mainthan Thursday, 09 June 2011 08:36 PM

  விமர்சனங்கள் எழுதுவதற்கும் தகுதி வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சட்டசபைத் தீர்மானம் வரவேற்கத்தக்கது. உலகத் தமிழர்கள் சார்பாக எங்கள் பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகுக.எல்லா இனங்களுக்கும் நிம்மதி
  எனக் குறிப்பிடும் அஸ்கர் சந்திர மண்டலத்தில் வாழ்கிறார்.


  Reply : 0       0

  xlntgson 0776994341;0716597735 sms only Thursday, 09 June 2011 08:58 PM

  இந்தியாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருக்கும் மாகாண அதிகார வரையறைக்குள் அவரால் இலங்கைத் தமிழருக்கு எதைச் செய்ய முடியுமோ அதைத் தான் செய்ய இயலும், அதல்லாமல் வெறும் அறிக்கை தான் விடலாம்!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .